×

மான்டி கார்லோ டென்னிஸ் காலிறுதியில் டேவிடோவிச்

மான்டி கார்லோ:  மொனோகாவில் நடைபெறும்  மான்டிகார்லோ மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேரடியாக 2 வது சுற்றில் களம் இறங்கிய உலகின் நெம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை  வீழ்த்திய  ஸ்பெயின் வீரர் அலெசாண்ட்ரோ டேவிடோவிச்சிடம்(22வயது, 46வது ரேங்க்) நேற்று 3வது சுற்றில் விளையாடினார்.

 அவரை பெல்ஜியம் வீரர் டேவிட் கோப்பின் (31வயது, 47வது ரேங்க்)  எதிர்த்து களம் கண்டார். அதில் டேவிடோவிச்  ஒரு மணி 32நிமிடங்களில்  6-4, 6-1 என நேர் செட்களில் டேவிட்டை  வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஜோகோவிச்  வெளியேறினாலும் மற்ற முன்னணி வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

இன்று நடக்கும் காலிறுதி ஆட்டங்களில் அலெக்சாண்டர் ஸ்வெரவ்(ஜெர்மனி, 3வது ரேங்க்)-ஜானிக் சின்னர்(இத்தாலி, 12வது ரேங்க்),  ஸ்டெபினோ சிட்சிபாஸ்(கிரீஸ், 5வது ரேங்க்)-டீகோ ஸ்வார்ட்ஸ்மன்(அர்ஜென்டீனா, 16வது ரேங்க்),  டேவிடோவிச்-டெய்லர் பிரிட்ஸ்(அமெரிக்கா, 13வது ரேங்க்) , ஹூபர்ட் ஹர்காஸ்(போலந்து, 14வது ரேங்க்)-கிரிகோர் டிமிட்ரோவ்(பல்கேரியா, 29வது ரேங்க்) ஆகியோர் மோத  உள்ளனர்.


Tags : Davitovich ,Monte Carlo , Monty Carlo, Tennis, Quarterfinal, Davydovich
× RELATED சில்லி பாயின்ட்…